த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-09 22:30 GMT

அறந்தாங்கி,

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன் முன்னிலை வகித்தார். இதில் த.மா.கா. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்