சூளகிரியில் பரபரப்பு: வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
சூளகிரியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.;
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்த்தெருவை சேர்ந்தவர் கண்ணன். நேற்று முன்தினம் இரவு, கண்ணனின் மனைவி உமா, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, நீண்ட நேரமாக நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.
இதையடுத்து உமா வெளியே வந்து பார்த்தார், அப்போது, வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஒரு மலைப்பாம்பு படுத்து இருந்தது. அது சுமார் 12 அடி நீளம் கொண்டதாக உள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பு சுவரில் இருந்து கீழே ஊர்ந்தவாறு சென்று வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு, அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். மேலும், காமநாயக்கன்பேட்டையில் உள்ள தேவேந்திரன் (வயது 35) என்பவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் பாம்பு பிடிப்பவர் ஆவார். அவர் உடனடியாக அங்கு வந்தார். இதைத்தொடர்ந்து மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் திணித்தபோது, மலைப்பாம்பு, தேவேந்திரனின் வலது கையில் கடித்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில், தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், மலைப்பாம்பை உயிருடன் மீட்டு, ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.