மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
மின்தடையை கண்டித்து காக்களூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் 250-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சீரான முறையில் மின்சார வினியோகம் செய்யாமல் ஒரு நாளைக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 4 முறைக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதனால் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சரியான முறையில் உற்பத்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி அவர்கள் தங்களுக்கு அடிக்கடி மின்தடை செய்யாமல் சீரான முறையில் மின்வினியோகம் செய்ய வேண்டும் என காக்களூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து இதே போன்று அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வந்தது. நேற்றும் காலையில் இருந்து 4 முறைக்கு மேலாக மின்சார வினியோகம் அடிக்கடி தடை செய்யப்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முடிவு எடுத்தனர்.
அப்போது சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன், துணை செயலாளர் சதீஷ்குமார் என தொழிற்பேட்டையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் காக்களூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிக்கடி மின்தடை செய்து மின் வினியோகம் செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
எனவே தங்களுக்கு இனிவரும் காலங்களில் தடையின்றி மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த மின்வாரிய செயற்பொறியாளர் தினகரன், காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களிடம் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து இனிவரும் காலங்களில் சீரான மின்சார வினியோகம் செய்ய தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.