கார் மோதி இளம்பெண் சாவு கோவா எம்.எல்.ஏ. மகன் கைது ஜாமீனில் விடுதலை
பெலகாவி அருகே கார் மோதி இளம்பெண் இறந்தார். இதுதொடர்பாக கோவா எம்.எல்.ஏ.வின் மகனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.;
பெங்களூரு,
பெலகாவி டவுன் ஆசாத் நகரை சேர்ந்தவர் தைனியாத் வாகித் பிஸ்தி (வயது 18). இவருடைய சகோதரி சம்ரின் காலித் பிஸ்தி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள பழமார்க்கெட் அருகே தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றனர். அப்போது, அந்த சாலையில் வந்த கார் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதனால் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.
விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தைனியாத் வாகித் பிஸ்தி பரிதாபமாக இறந்தார். சம்ரின் காலித் பிஸ்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் நின்ற காரை பொதுமக்கள் சேதப்படுத்தினர். காரை தீவைத்து எரிக்க முயன்றபோது அங்கு வந்த பெலகாவி வடக்கு போக்கு வரத்து போலீசார் பொதுமக்களை விரட்டிவிட்டு காரை மீட்டனர். விபத்துபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கோவா எம்.எல்.ஏ. கிளேன் டிக்லோவின் மகன் கைல் கிளேன் சவுசா டிக்லோ(27) ஓட்டி வந்த கார் மோதி விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கைல் கிளேன் சவுசா டிக்லோவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்த வேளையில் தன்னை தாக்கி காரை சேதப்படுத்தியதாக சிலர் மீது கைல் கிளேன் சவுசா டிக்லோ புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியதாக கைதான கைல் கிளேன் சவுசா திகோடா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.