திருப்பூரில் ம.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-09 22:30 GMT

திருப்பூர்,

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதை கண்டித்தும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் குமரன் சிலை முன்பு நேற்றுமாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் மணி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்