மோடமங்கலத்தில் மதுக்கடையை அகற்ற கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மோடமங்கலத்தில் மதுக்கடையை அகற்ற கோரி பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு ஒன்றியம், மோடமங்கலம் ஊராட்சியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பா.ஜனதா சார்பில் இந்த மதுக்கடையை அகற்ற கோரி அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த மதுக்கடையை அகற்ற கோரி நூதனமாக பாடையில் மதுபாட்டில்களை கட்டி தொங்க விட்டு இருந்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அப்புறப்படுத்துமாறு கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்செங்கோடு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாதார பிரிவு துணைத்தலைவர் அப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏழுமலை, ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தாமரைக்கண்ணன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். முடிவில் ஒன்றிய பொதுச்செயலாளர் மணிஷ் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லீலாவதி, ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜவேல், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் தங்கபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.