வேளச்சேரியில், பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே ஏரியில் வீசி கொன்றது அம்பலம் கடத்தல் நாடகம் ஆடியவர் கைது
வேளச்சேரியில், வீட்டில் பெற்றோருடன் தூங்கிய குழந்தை மாயமானதாக கூறப்பட்ட வழக்கில் பெற்ற தாயே, தனது குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம் ஆடிய அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் 5-வது தெருவில் வசிப்பவர் வெங்கண்ணா (வயது 30). இவர், தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உமா (26).
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன்பு சர்விக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுடன் உமாவின் தாய் மற்றும் தங்கையும் வசித்து வருகின்றனர்.
கடந்த 5-ந் தேதி இரவு பெற்றோருடன் படுத்து இருந்த பச்சிளம் குழந்தை, மறுநாள் காலை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீடு மற்றும் அக்கம்பக்கம் முழுவதும் தேடியும் குழந்தையை காணவில்லை. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சேஷஷாங் சாய், கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
நள்ளிரவில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் அந்த வழியாக நடந்து சென்றதை கண்டதாக ரோந்து போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அதில் குழந்தையுடன் சென்ற பெண்ணின் உருவம் உமாவைப் போன்று இருந்தது. இதனால் உமாவின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்று விட்டு, கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் உமா அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:- குழந்தை பிறந்ததில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும்போது எனக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்பட்டு வந்தது. இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் காண்பித்து மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்று பயந்தோம்.
குழந்தையை வேறு யாருக்காவது தந்து கொடுத்துவிடலாம் என்று கூறினேன். அதை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் ஏற்காததால் மனமுடைந்து இருந்தேன். கடுமையான வலியால் துடிதுடித்தேன். ஆனால் என் வேதனையை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவில்லை.
குழந்தைக்கு பால் கொடுக்கமுடியாமல் மனக்குழப்பத்தில் இருந்த நான், குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். 5-ந் தேதி இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பிறகு குழந்தையை தூக்கிச்சென்று பாலித்தீன் பையில் போட்டு அருகில் உள்ள ஏரியில் வீசினேன்.
பின்னர் எதுவும் தெரியாததுபோல் வீட்டில் வந்து படுத்துவிட்டேன். காலையில் எழுந்து குழந்தையை எங்கே? என கணவர் மற்றும் குடும்பத்தினர் கேட்டபோது, நானும் அவர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடினேன். நள்ளிரவில் யாராவது குழந்தையை கடத்திச்சென்று இருக்கலாம் என்று கூறினேன். அதை அனைவரும் நம்பி விட்டனர். ஆனால் போலீசார் என்னிடம் துருவி, துருவி விசாரித்து உண்மையை வாங்கி விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஏரியில் மிதந்த குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைதான உமாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை, தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.