பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-07 20:08 GMT

காரைக்குடி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் தை.ஆல்பர்ட்ராஜா தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்புச் செயலாளர் கபிலன் முன்னிலை வகித்தார்.

 ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் ஸ்ரீராம் அய்யர், மாநில துணைப் பொதுச் செயலாளர் திருஞானம், புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட செயலாளர் தரணிரமேஷ், மேற்கு மாவட்ட செயலாளர்சுரேஷ், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஷாபியாபர்வீன், பொருளாளர் ஆயிஷா, சிவகங்கை மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் குமார், சிவகங்கை கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சாந்தி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்