ரூ.1½ கோடி சொத்து மோசடி வழக்கில் பெண் கைது

திருத்தங்கலில் சொத்து மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-07 20:00 GMT

விருதுநகர்,

திருத்தங்கலை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவருக்கு சொந்தமாக 8 வீடுகள் திருத்தங்கலில் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும். அவரது ஒரே மகள் ஜெயகவுரி காதல் திருமணம் செய்து கொண்டு தாயை பிரிந்து சென்று விட்டார்.

 இந்த நிலையில் சுந்தரவள்ளி இறந்தவுடன் அவரது தம்பி தர்மராஜ், தங்கை ஜெயலட்சுமி(வயது 37) ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ஜெயலட்சுமியின் பெயருக்கு சுந்தரவள்ளியின் சொத்தை மாற்றியுள்ளனர். இதற்கு திருத்தங்கலை சேர்ந்த வக்கீல்கள் செந்தில்குமார், ராம்குமார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். திருத்தங்கலை சேர்ந்த ராணி என்பவரும் போலி ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார்.

இதுபற்றி ஜெயகவுரி கடந்த 2016–ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்திருந்த நிலையில் தர்மராஜை போலீசார் கைது செய்தனர். வக்கீல்கள் செந்தில்குமாரும், ராம்குமாரும் ஜாமீன் பெற்றனர். போலீசார் தேடி வந்த ஜெயலட்சுமி பெரியகுளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று கைது செய்து விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் 15 நாள் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராணியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்