ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட, பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட, பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2018-10-07 23:00 GMT
சுந்தரக்கோட்டை,


மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் ஆய்வு பணிக்காக திருவாரூர் மாவட்டத்தில் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் கிணறுகளை தோண்ட விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. பொதுமக்கள் இதை அனுமதிக்க கூடாது. இந்த நடவடிக்கைகளை தடுக்க தமிழக அரசு முன்வரவில்லை என்றால், விவசாயிகளை ஒன்று திரட்டி தடுத்து நிறுத்துவோம்.


இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடியை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட, பிரதமரிடம் முதல்–அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல காவிரியில் வரும் உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க ராசிமணலில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதியை பெறுவதற்கும் பிரதமரிடம், முதல்–அமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்