தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் சம்பளம் வழங்க கோரிக்கை
சம்பளம் வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலை ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரியும் கடந்த 1–ந் தேதி முதல் ஆலை முன்பாக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று 7–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையொட்டி கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஊழியர்கள் சங்க தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டம் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கும்படி அதிகாரிகள், ஆலை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.