‘மு.க.ஸ்டாலின் எப்போது முதல்-அமைச்சர் ஆவார் என்று மக்கள் கனவு காண்கிறார்கள்’ முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி பேட்டி
அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வீடு, வீடாக துண்டுபிரசுரம்: மு.க.ஸ்டாலின் எப்போது முதல்-அமைச்சராக வருவார் என்று மக்கள் கனவு காண்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கூறினார்.
சென்னை,
அ.தி.மு.க. அரசு மீது எழுந்துள்ள ஊழல்களை பட்டியலிட்டு, அதனை துண்டுபிரசுரமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள தர்மபுரம் பகுதியில் தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பொன்னுரங்கம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்களும் உடன் சென்றனர்.
முன்னதாக இந்திரகுமாரி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். நியாயமாகவும், நீதியாகவும் மக்களால் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கஜானாவை காலி செய்துவிட்டு மக்கள் தலையில் வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்.
ஜெயலலிதா இருந்தபோது வாயே திறக்காத அமைச்சர் ஜெயக்குமார், தற்போது மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக எப்போது வருவார் என்று மக்கள் கனவு காண்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.