காக்களூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2018-10-07 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் தலைமையில் சுகாதார அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் எப்போதும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், வீடுகளில் அன்றாடம் தேங்கும் குப்பை கூளங்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். தேவையற்ற டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்கள்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அங்கு பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீராம்காந்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்