கர்நாடகத்தில் 2 சட்டசபை, 3 எம்.பி. தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல்
கர்நாடகத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை, 3 எம்.பி. தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், அதுபோல ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன.
அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்காவில் எடியூரப்பாவும், பல்லாரியில் ஸ்ரீராமுலுவும், மண்டியா தொகுதியில் சி.எஸ்.புட்டராஜும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். சி.எஸ். புட்டராஜு ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர் ஆவார். அவர்கள் 3 பேரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 3 பேரும் எம்.எல்.ஏ.க்களாக இருந்து வருகின்றனர். கர்நாடக கூட்டணி ஆட்சியில் சி.எஸ்.புட்டராஜு மந்திரி பதவி வகித்து வருகிறார். இதனால் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.
அதுபோல் கடந்த மே மாதம் கர்நாடக சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னபட்டணா ஆகிய 2 தொகுதிகளில் முதல்-மந்திரி குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ராமநகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதுபோன்று, பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த சித்து நியாமகவுடா விபத்தில் பலியானார்.
இதனால் ராமநகர், ஜமகண்டி தொகுதிகள் காலியாக உள்ளது. இதை யடுத்து, 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வந்தது. மேலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் நேற்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 3-ந் தேதி சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை ெதாகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலுக்காக வருகிற 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந் தேதி கடைசி நாளாகும்.
மேலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. 5 தொகுதிகளுக்கு நடை பெறும் இடைத்தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சட்டசபையில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி தொகுதிகளில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட ஏற்கனவே முடிவு செய்துள்ளன. ராமநகர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
அதுபோல, ஜமகண்டி தொகுதியில் விபத்தில் பலியான சித்து நியாமகவுடாவின் மகன் ஆனந்த் நியாம கவுடா காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 2 சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்குமா? அல்லது தனித்து போட்டியா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு எடுக்க உள்ளனர். அதே நேரத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, இடைத்தேர்தல் நடைபெற உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க உள்ளார்.
3 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் 5 முதல் 6 மாதங்களே பதவியில் இருக்க முடியும். ஏனெனில் அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.