800 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் : டிரைவர் கைது

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 800 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-06 22:36 GMT
மும்பை,

வெளிமாவட்டத்தில் இருந்து மும்பை கோவண்டி பகுதிக்கு மாட்டிறைச்சி கடத்தி வரவுள்ளதாக சிவாஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று நள்ளிரவு சயான்-பன்வெல் நெடுஞ்சாலையில் வாகனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் அங்கு வந்த சரக்கு வேனை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 800 கிலோ மாட்டிறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மாட்டிறைச்சியை பறிமுதல் செய்த போலீசார், அவற்றின் மாதிரியை கலினா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த சோலாப்பூரை சேர்ந்த குட்டு (வயது29) என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பாரமதியில் இருந்து இறைச்சியை கோவண்டிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்