எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வேலூர் ஜெயிலில் இருந்து 4 பெண்கள் உள்பட 13 பேர் விடுதலை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 4 பெண்கள் உள்பட 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்,
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருபவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து முதல் கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக மொத்தம் 95 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஆண்கள் ஜெயிலில் இருந்து மகேஷ்வரன், தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம், சிட்டிபாபு, சக்கரவர்த்தி, சாம்ராஜ், மணி, வாசுதேவன், ஆறுமுகம், செல்வராஜ் என 9 கைதிகளும், பெண்கள் ஜெயிலில் இருந்து சாந்தம்மாள், தெய்வயாணி, கொளஞ்சியம்மாள், சத்தியா ஆகிய 4 கைதிகளும் என மொத்தம் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 13 கைதிகளுக்கும் அவர்களுடைய உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக அவர்களுடைய உறவினர்கள் சிறைக்கு வெளியே காத்திருந்து, பின்னர் வெளியே வந்த அவர்களை அழைத்துச்சென்றனர். இதுவரை வேலூர் ஜெயிலில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.