ரூ.1,250 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.;
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில், பருவமழையை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் ஆணைப்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சி நிதி 2018-ன் கீழ், ரூ.290 கோடி மதிப்பீட்டில் 117 கிலோ மீட்டர் தூரத்துக்கு 347 இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரூ.150 கோடி மதிப்பீட்டில் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு 130 விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவளம் வடிநிலப்பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 326 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலும், ஜெர்மன் நாட்டு நிதியும் கிடைத்தவுடன் இப்பணிகள் தொடங்கப்படும்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவசரக்காலங்களில் வெள்ளத்தடுப்பு பணிக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள் தயார்நிலையில் இருக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஏதுவாக சமுதாயக்கூடங்கள், பள்ளி கட்டிடங்களை தயார்நிலையில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருவமழைக் காலங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக கூடுதலாக நிதி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்கள் துறை தலைவர்களை அணுகி உடனடியாக தடையின்றி நிதி ஒப்பளிப்பு பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஆர்.லலிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.