மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-06 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில், கோட்டார் சாஸ்தாநகரை சேர்ந்தவர் சங்கரகுமார் (வயது 27). இவருடைய மனைவி ஷைனி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சங்கரகுமார் பறக்கையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதாக தெரிகிறது. இதனால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு சங்கரகுமார் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதை அவருடைய மனைவி ஷைனி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சங்கரகுமார் வேகமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது உறவினர்கள் சங்கரகுமாரை தேடி சென்றனர். அப்போது, பறக்கையில் அவர் வேலை பார்த்து வந்த பேக்கரி கடையின் அருகில் உள்ள மரத்தில் சங்கரகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சங்கரகுமார் தற்கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்