அரசு பஸ்சில் அரங்கேறிய விபரீத விளையாட்டு : குரங்கு, பஸ் ஓட்டும் வீடியோ காட்சி

கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்றில் ஏறிய குரங்கு, ஸ்டீரியங் மீது அமர்ந்து அதனை பிடித்து அப்படி இப்படி திருப்புகிறது.

Update: 2018-10-05 23:49 GMT
பெங்களூரு,

பஸ்சின் டிரைவர் பார்த்து ரசிப்பதுடன், முன்னால் பார்த்து ஸ்டீரியங்கை இப்படி திருப்பு... அப்படி திருப்பு என சொல்கிறார். ஆனால் அந்த குரங்கோ ஸ்டீரியங் மீது அமர்ந்துகொண்டு அது இஷ்டத்திற்கு பஸ்சை ஓட்டுகிறது.

ஆபத்தை அறியாமல் குரங்குடன் விளையாடி பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்க கூடிய வகையில் நடந்த இந்த காட்சிகளை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பஸ் எந்த பகுதியை சேர்ந்தது என்பது தெரியவில்லை. டிரைவரின் அலட்சியத்தால் அசம்பாவிதம் நிகழ்ந்தால் என்னாவது? உடனே டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்