வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 19 வாள்கள் பறிமுதல் : 9 பேர் கைது

அவுரங்காபாத்தில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 19 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-05 22:43 GMT
அவுரங்காபாத்,

அவுரங்காபாத், ஹர்சுலில் உள்ள ஜஹாங்கீர் காலனி பகுதியை சேர்ந்தவர் அலீம் கான். இவர் தனது வீட்டில் வாள்களை பதுக்கி வைத்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து 2 வாள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த மேலும் பலரது வீட்டில் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ெமாத்தம் 19 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அலீம் கான் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்