கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-05 22:00 GMT

கடலூர்,

கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ஜெயராமன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், முன்னாள் வட்ட செயலாளர் இளையராஜா, வட்ட பொருளாளர் தணிகாசலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள் குறித்து பேச சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசிய சப்–கலெக்டரையும், அவரின் நேர்முக உதவியாளரையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சப்–கலெக்டரை கண்டித்து வருகிற 8–ந்தேதி (திங்கட்கிழமை) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சை உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிறுவிடுப்பு எடுத்து, கடலூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளதாக மண்டல செயலாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்