பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-05 23:00 GMT

திண்டுக்கல்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை தலைவர் கோபால், துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்று அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, பழனி பஸ் நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் (வடக்கு) வைரமுத்து தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராசரத்தினம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜோதிமுத்து சிறப்புரையாற்றினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்