ரூ.3,200 கோடியில் அமைய உள்ள 6 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ரூ.3,200 கோடி செலவில் தச்சூர் மற்றும் சித்தூர் இடையே அமைய உள்ள 6 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க அதிகாரிகள் குழுவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2018-10-05 22:45 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் துாரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சாலை கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்துார், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவீடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் துாரத்துக்கு 230 ஏக்கர் நிலபரப்பில் விளை நிலங்கள், அரசு பள்ளி, 75-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கபடும் சூழ்நிலை உள்ளது. அப்படி நிகழ்ந்தால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குரு விவசாயிகள் பாதிப்பு அடைவர். இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமம் வழியாக 6 வழி சாலை அமைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நில அளவீடு பணிக்காக அதிகாரிகள் 2 முறை கிராமத்திற்கு வந்தபோது அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நில அளவீடு பணியை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

பின்னர் இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘மாற்று பாதையில் 6 வழிச்சாலை அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டர் அறிவுரையின்படி பொதுமக்களை சமாதானப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பையா, ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன் தலைமயில் அதிகரிகள் குழு நேற்று சென்னங்காரனை கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு மாற்றுப்பாதையில் 6 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்