பெட்ரோல் –டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் எம்.பி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல் –டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் மாநில பொறுப்பாளர் பொ.வை.ஆறுமுகம், மாவட்ட தலைவர் நடராஜ், செயலாளர் கிருபாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், தலைவர் பெருமாள், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபால், மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.