பெண், தூக்குப்போட்டு தற்கொலை
வேப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
வேப்பூர்,
வேப்பூர் அருகே காட்டுமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35). இவருக்கும் அதேஊரை சேர்ந்த கவுரி(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் துபாயில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கவுரி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று கவுரி, வெளிநாட்டில் உள்ள தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த கவுரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுரி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.