ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர் கைது
சட்டவிரோதமாக இரும்பு தாது வெட்டி எடுத்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளரை சிறப்பு விசாரணை குழு நேற்று கைது செய்தது.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடந்த கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் சண்டூர் தாலுகா சித்தாபுரா கிராமத்தில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் ஒப்பந்தத்தை ஷேக் சாப் என்பவரின் நிறுவனம் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் ஷேக் சாப்பை மிரட்டி அவருடைய நிறுவனத்தை முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர் அலிகான் என்பவர் தனது நிறுவனத்துடன் இணைத்து கொண்டார். பின்னர், கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஷேக் சாப் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் இருந்து சட்டவிரோதமாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 383 மெட்ரிக் டன் இரும்புதாது வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக லோக் ஆயுக்தா சிறப்பு விசாரணை குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சித்தாபுரா கிராமத்தில் சட்டவிரோதமாக இரும்பு தாது வெட்டி எடுத்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளரும், கனிம சுரங்க அதிருபமான சீனிவாஸ் ரெட்டிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சீனிவாஸ் ரெட்டியை நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.