மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் மீட்பு; போலீசார் விசாரணை
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோரம் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் சாலையோரம் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் பிணமாக கிடந்த வாலிபர் கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 24) என்பதும், காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர் கொலை செய்யப்பட்டாரா? இவரை கொலை செய்த மர்ம நபர்கள் பிணத்தை காரில் கொண்டு வந்து இங்கு வீசி விட்டு சென்றனரா? அல்லது காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.