பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும்
பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை,
பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளாகும். எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தமிழகத்தில் முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் தமிழகத்தை பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாநிலமாக மாற்ற தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கடந்த 15.07.2018 முதல் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட் களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்களை அலுவலர்கள் தவறாமல் நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீதி நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் சந்தைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடை செய்வதுடன் கறிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி ஆனந்த்குமார், திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், மகளிர் திட்ட அதிகாரி சரோஜாதேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.