கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

மத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

Update: 2018-10-02 22:45 GMT
கிருஷ்ணகிரி,

மத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அம்பேத்கர் நகரில் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களில், 35 குடும்பத்தினருக்கு சொந்த வீடுகள் இன்றி மிகவும் சிரமமாக உள்ளது. நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். போதிய வருமானமின்றி, குழந்தைகளுடன் வீடுகள் இன்றி குடியிருப்பது மிகவும் அவதிக்குள்ளாகிறது. எனவே வீட்டு மனை ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை இடம் வழங்கவில்லை. இப்பகுதியில் 50 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இரண்டு சென்ட் வீதம் இடம் வழங்கி பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்