கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெறக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2018-10-01 21:45 GMT
நாகர்கோவில், 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் என்ற பெயரில் உயர்த்தப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட கட்டணங்களை திரும்பபெற வேண்டும், தாய்மொழியில் கல்வி பயின்று தேர்வு எழுதிட வழிவிட வேண்டும், மாணவர் பேரவை தேர்தலை கட்டாயமாக நடத்திட வேண்டும், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பதில்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெசின், மாவட்டக்குழு உறுப்பினர் பிரிஸ்தில், அரசு கலைக்கல்லூரி மாணவர் தலைவர் சஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்