கல்யாணில், துணை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஆட்டோவில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்

கல்யாணில் ஆட்டோவில் இருந்து பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் டிரைவர், 3 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-29 23:36 GMT
அம்பர்நாத், 

கல்யாணில் ஆட்டோவில் இருந்து பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் டிரைவர், 3 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோவில் வெடிபொருட்கள்

கல்யாண், வயாலே நகர் பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் ஜாதவ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவில் வெடிபொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடக்பாடா ேபாலீசார் துணை கமிஷனர் அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்த ஆட்டோவில் சோதனை போட்டனர்.

அப்போது ஆட்டோவில் இருந்து 4 வெடிகுண்டு டெட்டனேட்டர் மற்றும் 2 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் வந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

4 பேரிடம் விசாரணை

இதில், அவர்கள் ஆட்டோவில் துணை கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சப்-டிவிஷனல் அலுவலகத்திற்கு வந்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆட்டோவில் இருந்த வெடிபொருட்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினர். எனினும் போலீசார் அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆட்டோ டிரைவரை போலீசில் சிக்க வைக்க அவரது விரோதிகள் யாரும் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுெதாடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்