விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரத்தில் நடை பெறும் விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-09-29 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடிய சீனிவாசராவ் நினைவு தினத்தன்று மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கொடியேற்றுவது, அனைவருக்கும் கல்வி, வேலை, வீடு, ஓய்வூதியம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2, 3, 4-ந் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடக்கிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்