சைபர்வழி போரை சமாளிக்க மாணவர்கள் தயாராக வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
சைபர்வழி போரை சமாளிக்க மாணவர்கள் தயாராக வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
‘வருங்காலத்தில் சைபர் தொழில்நுட்பத்தில் போர்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அதனை சமாளிக்க மாணவர்கள் தயாராக வேண்டும்’ என்று வி.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி.யின் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினராக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தேர்வில் சிறப்பிடம் பெற்ற 54 மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் தற்போது வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல பல்கலைக்கழங்களில் உயர்கல்வி பயில ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியாவில் சிறப்பான கல்வி அளிக்கப்பட்டது. இந்தியாவில் 15-ம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகம் இயங்கியது. அங்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கல்வி பயின்றனர்.
மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்கின்றனர். அதனைவிடுத்து மாணவர்கள் அரசு சேவையில் ஈடுபட வேண்டும். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் துறையில் வேலைக்கு செல்கின்றனர். மாணவர்கள் அரசுத்துறையில் உள்ள பொறுப்புகளுக்கு வரவேண்டும். படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் அனைவரிடமும் காணப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் மற்றும் கடந்த 50 ஆண்டுகளாக சுயதொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போதைய அரசு அத்தகைய முறையை உடைத்துள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கு அனுமதி பெறும் முறையை எளிதாக்கி உள்ளது. தொழில் தொடங்கும் கொள்கைகள் தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. வேலைக்கான கல்வி என்ற நிலையை மாற்றி முதலாளிகளை உருவாக்குவதற்கான கல்வி என்ற நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
வருங்காலங்களில் இருநாட்டிற்கு இடையே எல்லைப்பகுதியில் பீரங்கிகளை கொண்டு போர் நடைபெறாது. சைபர் வழி மற்றும் வான்வெளியில் தான் போர்கள் நடக்க வாய்ப்புள்ளது. சைபர் தொழில்நுட்ப போர்களால் தேசிய பாதுகாப்பு மற்றும் தனிமனிதனின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி, சைபர் தொழில்நுட்ப போரை சமாளிக்க தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.
விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் 6,277 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆவார். பழைய வடஆற்காடு மாவட்டம் ராணுவத்துக்கு அர்ப்பணித்து கொண்ட மாவட்டமாகும். பஞ்சாப் மாநிலத்துக்கு அடுத்தபடியாக பழைய வடஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினர்.
இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஆனால் உலக அளவில் சிறந்த மாணவர்களில் ஒரு சதவீதம் பேர் தான் இந்தியாவில் உள்ளனர். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ரூ.75 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி செலவாகிறது. 1991-ம் ஆண்டு பல்வேறு துறைகளில் தாராள மயமாக்கல் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. கல்வித்துறையை தவிர அனைத்து துறைகளிலும் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கல்வித்துறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க ராணுவ மந்திரி முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதில், கவுரவ விருந்தினராக ‘பிரேக்ஸ் இந்தியா’ மற்றும் ‘சுந்தரம் பைனான்ஸ்’ நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஜிசந்தானம் கலந்துகொண்டு பேசினார். விழாவில் இணை துணை வேந்தர்கள் எஸ்.நாராயணன், சம்மந்தம், பதிவாளர் சத்திய நாராயணன் மற்றும் டீன்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவுக்கு வந்த மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை வி.ஐ.டி.வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.