கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கியவர் கைது 5 பேருக்கு வலைவீச்சு

கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2018-09-29 20:56 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம நிர்வாக அதிகாரி பாஸ்கர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே மெய்யூர் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மொண்ணவேடு கிராமத்தை சேர்ந்தவர்களான அண்ணாதுரை, ராஜேஷ், பொன்னன் மகன் வெங்கடேசன் (வயது 38), துரை மகன் வெங்கடேசன், முனுசாமி, மணிகண்டன் ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது.

அவர்களை மெய்யூர் கிராம நிர்வாக அதிகாரி பாஸ்கர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

கைது

இது குறித்து ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னன் மகன் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்