காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், மீன் வளர்க்க அரசு உதவி வழங்க வேண்டும், பண்ணை குட்டை அமைக்க வேண்டும், தண்ணீர் இன்றி காய்ந்த நெல் பயிருக்கு நிவாரணம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
கூட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பேருக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் பொன்னையா பேசும்போது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
தண்ணீர் இன்றி கருகிய பயிர்கள் விவரம் அரசுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது. அறிவுரை பெறப்பட்டவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் விளை பொருளுக்கான உரிய தொகை அன்றைய தினமே காலதாமதம் இன்றி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பி.கோல்டிபிரேமாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி வை.ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.