தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்.-2, எப்.எல்.-3, உரிம தலத்திலான பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
தூத்துக்குடி,
காந்தி ஜெயந்தியையொட்டி வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்.-2, எப்.எல்.-3, உரிம தலத்திலான பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது.
அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.