தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பஸ் நிலையத்தை சுத்தம் செய்த மாணவ-மாணவிகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் தூய்மையே சேவை திட்டம் நடந்து வருகிறது.

Update: 2018-09-29 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் தூய்மையே சேவை திட்டம் நடந்து வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறு நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி தலைமை தாங்கி, சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் பங்கேற்றவர்கள் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்றனர். தூய்மை பணியில் பங்கேற்றவர்களுக்கு துறைமுகம் சார்பில் டி-சர்ட் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழைய பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக செயலாளர் ஈசுராய், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாந்தி, போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், துணை தலைமை என்ஜினீயர் ரவிக்குமார், டாக்டர் ஜோசப் சுந்தர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்