பிறவியிலேயே காது கேட்காத 50 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
பிறவியிலேயே காது கேட்காத 50 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கல்லூரி டீன் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளும் பெற்றோருடன் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே நினைவு பரிசு வழங்கினார். முன்னதாக முகாமில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியபோது கூறியதாவது:-
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. கேட்கும் திறனை பிறவியிலேயே இழந்த குழந்தைகள், இந்த சிகிச்சை மூலம் கேட்கும் திறனை பெறுகிறார்கள். இந்த நவீன அறுவை சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்ய 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது வரை 50 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கின்றன.
உலக காது கேளாமை தினம் 30-ந் தேதி (அதாவது நாளை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வருகிற 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் செவித்திறன் குறைபாட்டை கண்டுபிடிக்க செவித்திறன் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளர் கண்ணன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர் கலைக்குமார் மற்றும் டாக்டர்கள் சுரேஷ்பாலன், பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.