கறம்பக்குடி அருகே அக்காள், தம்பிக்கு அரிவாள் வெட்டு தப்பியோடிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கறம்பக்குடி அருகே அக்காள், தம்பியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 50). விவசாயி. இவரது அக்காள் காசியம்மாள் (55). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு, சிவபெருமாளுக்கு சொந்தமான பம்புசெட் அருகே கீழே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 கொண்ட ஒரு கும்பல் வந்தது. இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பம்செட் அருகே அமர்ந்து இருந்த சிவபெருமாள் அவரது அக்காள் காசியம்மாளையும், அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபயகுரல் எழுப்பினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைக்கண்ட அந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் சிவபெருமாள், காசியம்மாளை அரிவாளால் வெட்டிய கும்பல் யார்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறெதும் காரணமாக அரிவாள் வெட்டு விழுந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு ரெகுநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.