தந்தை திட்டியதால் சகோதரிகளுடன் விஷம் குடித்தவர்: திருமணம் நிச்சயமான பெண் பரிதாப சாவு
தந்தை திட்டியதால் சகோதரிகளுடன் விஷம் குடித்த திருமணம் நிச்சயமான பெண் பரிதாபமாக இறந்தார்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெரு பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா (வயது 33), ரேவதி (30) கலைமகள் (26) உள்பட 5 மகள்கள் இருந்தனர். இதில் 2 பேருக்கு திருமணம் முடிந்துவிட்டது. பட்டதாரியான மேனகாவுக்கும் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் மணமகனின் உறவினர்கள் சிலர் அழகேசன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவர்களை சரியாக உபசரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் அழகேசன் தனது மகள்களை திட்டினார். இதனால் மனவேதனை அடைந்த மேனகா, ரேவதி, கலைமகள் ஆகிய 3 பேரும் விஷம் குடித்தனர்.
பின்னர் வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல்நலம் தேறிய ரேவதி வீட்டுக்கு திரும்பினார்.மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மேனகா பரிதாபமாக இறந்தார். கலைமகளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.