7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-28 21:45 GMT
நாகப்பட்டினம்,


தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கரும்பாயிரம் தலைமை தாங்கினார். சங்க மாநில துணை தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாநில அமைப்பாளர் சுகுமார் கலந்துகொண்டு பேசினார்.

கிராம ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி நாட்களை கணக்கிட்டு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை ஓய்வு பெற்ற கிராம ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தின் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்