ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திரண்ட பெண்கள்

ஓரியூர் ஊராட்சி புதுவயல் பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-28 22:30 GMT

ராமநாதபுரம்,

திருவாடானை தாலுகா ஓரியூர் ஊராட்சிக்குட்பட்ட புதுவயல் பகுதியை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து குடிநீர் கேட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 எங்கள் பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீருக்கு மட்டுமல்ல அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீருக்கும் அலையாய் அலைந்து திரிந்து வருகிறோம். கால்நடைகளுக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக எங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்