பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் பின்வருமாறு:-
விவசாயி சுந்தரம்:- கொல்லிமலையில் இருந்து வரட்டாறு வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் வரும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர்:- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.
காப்பீட்டு தொகை
விவசாயி பெரியதம்பி:- பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துறை அலுவலர் கவுதமன்:- 2016-17-ம் ஆண்டில் 13 ஆயிரத்து 898 பேருக்கு 26 கோடி ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. மகசூலின் கணக்கீடு கிடைக்காமலும், மனுவின் விவரங்கள் சரியாக இல்லாததாலும் சில மனுதாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதை சரி செய்து விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விவசாயி சரவணன்:- உழவன் செயலியில் பெரும்பாலான உரங்கள் மற்றும் உரக்கடைகள் குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை.
கலெக்டர்:- படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மானியம் வேண்டும்
விவசாயி நல்லாகவுண்டர்:- பழ தானிய பயிர்களை விதைக்க விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மானியம் கொடுக்க வேண்டும். விரைவில் நடக்க உள்ள 2-ம் கட்ட கூட்டுறவு தேர்தல் ஜனநாயக முறையில் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தலில் போட்டி போட விரும்புபவர்களுக்கு மனுக்கள் கிடைப்பதில் பிரச்சினை இருக்ககூடாது.
கலெக்டர்:- நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி துரைசாமி:- 2016-17-ம் ஆண்டில் காய்ந்து போன மானாவரி பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும். அதேபோல் அடையாள அட்டை கொடுத்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அரசு விவசாய எந்திரங்களை தடையின்றி பயன்படுத்த முடியும். டீசல் விலை உயர்வு காரணமாக எந்திரங்களை தற்போது பயன்படுத்த முடியவில்லை.
கலெக்டர்:- கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் சப்-கலெக்டர் கிராந்தி குமார், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் சந்தானம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், வேளாண் அதிகாரிகள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.