பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கட்டிட தொழிலாளி உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
பரமத்தி அருகே, பிளஸ்-2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளி உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கதிரேசன் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 17-ந் தேதி ராசாம்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை திருமண ஆசைக் காட்டி கடத்திச்சென்று திருமணம் செய்ததோடு, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கதிரேசனை கைது செய்தனர். மேலும் இவருக்கு கடத்தல் மற்றும் இளம்வயது திருமணத்திற்கு ஈரோடு மாவட்டம் வைரம்பாளையத்தை சேர்ந்த சசிகலா (30) என்பவர் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சசிகலாவையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசிலா வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கதிரேசன் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். இதேபோல் கதிரேசனுக்கு ரூ.2 ஆயிரம், சசிகலாவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.