குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் பொதுப்பணித்துறை அதிகாரியுடன் வாக்குவாதம்
60 நாட்களுக்கு மேலாகியும் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கொள்ளிடம் அணை தாங்காது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறினர். அப்போது விவசாய சங்கத் தலைவருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மத்திய கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, “விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று தடை உத்தரவு இருக்கும்போது, மின்இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அய்யன்வாய்க்கால், கட்டளை வாய்க்கால், பெருவளை வாய்க்கால்களில் 60 நாட்களுக்கு மேலாகியும் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை” என்று பேசினார்.
அப்போது கலெக்டர் ராஜாமணி குறுக்கிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டார். பொதுப்பணித்துறை அதிகாரி கூறும்போது, ‘இப்போது முழுமையாக தண்ணீர் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதுவரை 3 வாய்க்கால்களிலும் 350 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. விரைவில் 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படும்’ என்றார். அப்போது அய்யாக்கண்ணு பொதுப் பணித்துறை அதிகாரியிடம் தவறான தகவல்களை அளிக்ககூடாது என்று கலெக்டர் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் பேசுகையில், “முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு பலவீனமாக உள்ளது. 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தால் தாங்காத நிலையில் உள்ளது. ஆகவே ராணுவத்தை வைத்து பலமாக அமைக்க வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன் பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு இன்னும் காவிரி நீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-
பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால்களில் எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்னும் எவ்வளவு தேவை இருக்கிறது என்பது உள்ளிட்ட சரியான விவரங்களை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், அவர்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடனுக்காக செல்லும்போது, பல்வேறு காரணங்களை சொல்லி தட்டி கழிக்கக் கூடாது. கடன் பெறுவதற்கு தகுதி இருந்தால் அதற்கான உரிய சான்றிதழ்களை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10ஆயிரத்து 33 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை செப்டம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில் முதல் கட்டமாக லால்குடி வட்டாரத்தில் அன்பில், அரியாவூர், திண்ணியம், டி.கல்விக்குடி, நகர் ஆகிய இடங்களில் கடந்த 17-ந் தேதி முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இதுவரை 408 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 2-ம் கட்டமாக கடந்த 25-ந் தேதி முதல் தின்னக்குளம், நத்தமாங்குடி, செம்பரை, கோமாக் குடி, சிறுமயங்குடி ஆகிய 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக லால்குடி வட்டாரத்தில் நெற்பயிர் சேதம் அடைந்ததால் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு கீழ் அன்பில், அரியூர், மங்கம்மாள்புரம், நத்தமாங்குடி, ஆலங்குடி மகாஜனம், டி.கல்விக்குடி, கூகூர் ஆகிய கிராமங்களில் 289 விவசாயிகளுக்கு 177 ஹெக்டேருக்கு ரூ.23 லட்சத்து 94 ஆயிரத்து 55-க்கு நிவாரணம் வழங்கிட பரிந்துரை செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அந்தநல்லூர், லால்குடி, தொட்டியம் ஆகிய பகுதிகளில் சேதம் அடைந்த வாழைப்பயிர் கணக்கிடப்பட்டு 246 விவசாயிகளுக்கு 128 ஹெக்டேருக்கு ரூ.17 லட்சத்து 28 ஆயிரம் நிவாரணம் வழங்கிட பரிந்துரை செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.