கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்த மான ரூ.6 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2018-09-27 22:45 GMT
காமநாயக்கன்பாளையம்,

கோவை-திருச்சி மெயின் ரோட்டில் பல்லடத்தில் பொன்காளியம்மன் கோவி லுக்கு சொந்தமான சுமார் 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பல்லடம் நகராட்சி முன்னாள் துணைத்தலை வரும், அ.தி.மு.க. பிரமுகரு மான வைஸ்.பழனிசாமி ஆக் கிரமித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இடத்தை அவருக்கு சொந்தமான திரு மண மண்டபத்திற்கு கார்கள் நிறுத்துவதற்காக (பார்க்கிங்) பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பார்வையிட்டு “இது அறநிலையத்துறைக்கு சொந்த மான இடம்” என்று 2 போர்டு கள் வைக்கப்பட்டன.

இதற்கிடையில் வைஸ்.பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இடத்திற்கு வாடகை தருவதாகவும், நிலம் காலியாக இருந்தால் சிலர் குடிசை போட்டு ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள் என்றும், அவர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் அங்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள், அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து ‘சீல்’ வைத்து விட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி யாகும்.

இது குறித்து வைஸ்.பழனிசாமி கூறும்போது “ எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த கம்பி வேலி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மண்டபத்தில் 28-ந்தேதி (இன்று) அனுமதியற்ற மனை களை வரன்முறை படுத்தும் முகாம் நடைபெற உள்ள நிலையில் இப்படி செய்துள் ளார்கள். மேலும் அந்த இடத்தில் உள்ள பொதுக் கோவிலான விநாயகர் கோவிலுக்கு சாமிகும்பிட செல்ல வழிவிடவில்லை. விநாயகருக்கு தினமும் பூஜை நடைபெற வேண்டும். ஆனால் இந்து சமய அறநிலையத் துறையே இதனை தடுக்கிறது. மேலும் அந்த இடத்திற்கு நில வாடகை தர தயாராக உள்ளேன்” என்றார்.

மேலும் செய்திகள்