இலவச வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம்: அதிகாரிகளை கண்டித்து மறியல்
திருப்பரங்குன்றம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் கேட்டதாக அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது அதே ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கலமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, தங்களுக்கு பட்டா வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றவில்லை என்றும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சரிடம் முறையிட முயன்றனர்.
இருப்பினும் போலீசார் தடுத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் நேற்று தனக்கன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வெங்கலமூர்த்தி நகர் பகுதி பெண்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாக கூறியதுடன், அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக நாங்கள் குடியிருந்து வருவதால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அரசு துறையில் பணியாற்றியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலவச வீட்டுமனைகள் வழங்கி உள்ளனர். ஏழைகளுக்கு வழங்குவதாக கூறி 5 பேருக்கு டோக்கன் வழங்கினார்கள். ஆனால் அவர்களுக்கும் பட்டா வழங்காமல் பணம் கொடுத்தால் தான் பட்டா வழங்கப்படும் என்று கூறிவிட்டனர்.
எனவே லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியுடைய நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து மதுரை-தென்பழஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மறியல் செய்த 54 பெண்களை போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.