பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கருவூல பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாடு மேலாண்மை திட்டம் மூலம் கருவூல துறையில் ஆட் குறைப்பு செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கருவூல துறையின் முக்கிய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.