மின்சார கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் நோட்டீஸ் மின் வினியோக நிறுவனம் அறிவிப்பு

மின்சார கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக மின் வினியோக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Update: 2018-09-26 23:00 GMT
மும்பை,

மின்சார கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக மின் வினியோக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மின்னணு முறையில்...

மராட்டியத்தில் மின்கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர மாநில மின்சார வினியோக நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக கட்டணம் செலுத்த தவறிய நுகர்வோருக்கு வாட்ஸ் அப், குறுந்தகவல் மற்றும் இ-மெயில் போன்ற மின்னணு முறையில் நோட்டீஸ் அனுப்பும் திட்டத்தை மராட்டிய மின்சார ஒழுங்குமுறை கமிஷனுக்கு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்துக்கு மின்சார ஒழுங்குமுறை கமிஷன் ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுகுறித்து மின் வினியோக நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மின் துண்டிப்பு நடவடிக்கை

இனி மின்கட்டணம் செலுத்த தவறும் நுகர்வோருக்கு மேற்கண்ட மின்னணு முறையில் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீசின் அடிப்படையிலேயே மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுதியான நோட்டீசாக கருதப்படும்.

இதற்காக மின் நுகர்வோரின் செல்போன் நம்பர், இ-மெயில் போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விடடது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்