திருவள்ளூர் அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி டிரைவர் கைது

திருவள்ளூர் அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-26 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது 35) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பாண்டி வேலையை முடித்து விட்டு அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவர் வெள்ளவேடு அருகே சாலையை கடக்க முயன்றபோது திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சென்னை நெற்குன்றம் சக்திநகரை சேர்ந்த யுவராஜ் (30) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்